செய்திகள்

செங்கல்பட்டு,-

மாமல்லபுரம் அருகே உள்ள காரணை கிராமத்தில் பஞ்சமி நில மீட்பு போராட் டத்தில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் கடந்த 2012-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்க விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் நிர்வாகிகள் சென்ற போது அங்குள்ள தனியார் நிலம் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாமல்லபுரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் திருமாவள வன் உள்பட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மேலிஸ் தீபிகா சுந்தர வந்தானா முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேரும் நேரில் ஆஜரானார்கள். வழக்கு விசாரணை வருகிற அக்டோ பர் 1-ந்தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டது.



from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/DiHfFmo
via IFTTT

Post a Comment

0 Comments