கல்லறை மனிதனின் கற்பனை


கல்லறை காக்கும் 
காவல் தெய்வமோ?


சில்லறை மனிதனெனக் 
கல்லறை மனிதன் 
சிரிக்கிறானோ?


கல்லறைக்குள் காற்று 
இல்லை என்று 
வெளியில் வந்து 
தணிந்து கொள்கிறாயோ?


சுமந்து வருவோரைப்
பார்த்துச் சிரிக்கிறாயோ?


மனித வேடம் அணிந்து 
நடிக்கும் மகா நடிகர்களைப் 
பார்த்து நகைப்போ?


நிம்மதிக்கு அலையும் மனிதன் 
 நிலைகண்டு சிரிக்கிறாயோ?


மாசுபடுத்திச் சென்றது நானே என்று
மார்தட்டிச் சிரிக்கிறாயோ?


பதவி ஆசை வேண்டாம் என்று 
பரிகசிக்கிறாயோ?


செத்தாலும் பதவி 
ஆசை விடாதோ?


சொர்க்கத்தில் எடுக்கும் 
புகைப்பட ஒத்திகையோ?


எல்லோரும் வந்துதான் ஆக வேண்டும் 
என்ற ஏளனச் சிரிப்போ?


வாழும்போது சிரிக்காத சிரிப்பை 
இப்போது சிரிக்கிறாயோ?


எப்படியோ சிரித்து விட்டுப் போ
நாங்கள் மாறுவதாய் இல்லை
மடிந்த மாண்புயர் மனிதனே!


 

Post a Comment

0 Comments