இன்னிசை வெண்பா - இயற்கையை பாராட்டுதல்
இயற்கை பொழியும் இனிமை வனமே
இயல்பாய் வழியும் இரட்டிப்பு எண்ணமே
விழிகள் கொள்ளும் மலையின் அழகை
மொழிவோம் தமிழால் முகர்ந்து.
புதுக்கவிதையில் இயற்கையை பாராட்டுதல்.
வானம் தொட முயலும் மலை முகடுகள்.
வழிந்தோடிய பாதையில் தங்கி ஓய்வெடுக்கும் தண்ணீர்.
ஒளிச்சேர்க்கை நடத்தி பட்டாடை அணிந்த பச்சைத் தாவரங்கள்.
ராணுவ அணிவகுப்பு நேர்த்தியாய் தேயிலை தேவதைகள்.
நேர்த்தியான பாதையில் நிழல் தரும் மரம்.
வழிந்தோடிய பாதையில் தங்கி ஓய்வெடுக்கும் தண்ணீர்.
ஒளிச்சேர்க்கை நடத்தி பட்டாடை அணிந்த பச்சைத் தாவரங்கள்.
ராணுவ அணிவகுப்பு நேர்த்தியாய் தேயிலை தேவதைகள்.
நேர்த்தியான பாதையில் நிழல் தரும் மரம்.
இயற்கை எழில் சூழ்ந்த வெள்ளை மாளிகை.
கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சியும் இதுவன்றோ?
கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சியும் இதுவன்றோ?
0 Comments