தென்காசி,
தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த பரவலான மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் மிதமாக விழுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி போன்றவற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர்.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு, தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வாகனங்களில் புறப்பட்டு செல்கின்றனர். அவர்கள் குற்றாலம் அருவிகளில் புனித நீராடிய பின்னர் குற்றாலநாதர் கோவில், தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்து பயணத்தை தொடர்கின்றனர்.
இதனால் குற்றாலம் அருவிகளில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மெயின் அருவியில் குவிந்த அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீராடினர். ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளிலும் குளித்து மகிழ்ந்தனர். இதேபோன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிந்து செல்லும் பெண் பக்தர்களும் வாகனங்களில் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் புனித நீராடினர்.
from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/59i6b31
via IFTTT
0 Comments