செய்திகள்

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் மூடப்பட்டு கிடக்கும் கோவில்களை வழிபாட்டிற்கு திறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் எதிரொலியாக மொரதாபாத் மாவட்டத்தில் தவுலதாபாக் பகுதியில் உள்ள ஒரு கோவில் 44 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் திறப்பு விழா கண்டது. 2 சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மூடப்பட்டுக் கிடந்த கோவில், அரசு நிர்வாக முயற்சியின் மூலம் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளது. காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் கோவில் திறப்பு விழா நடந்தது.

மக்கள் ஏகோபித்த ஆதரவு அளித்ததால், எந்தவித எதிர்ப்பு மற்றும் அசம்பாவிதம் இன்றி கோவில் திறக்கப்பட்டது. அப்போதுதான் சில சிலைகள் சாய்ந்தும், மாயமாகியும் இருப்பது தெரியவந்தது. கோவில் நிர்வாகிகள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, அவற்றை சரி செய்யும் பணியில் இறங்கினர். விரைவில் வழக்கமான வழிபாடுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.



from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/jxMklCZ
via IFTTT

Post a Comment

0 Comments