மும்பை,
இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அதன்படி, 91 புள்ளிகள் உயர்ந்த நிப்டி 23 ஆயிரத்து 707 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 280 புள்ளிகள் உயர்ந்த பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 202 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
234 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 78 ஆயிரத்து 199 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 112 புள்ளிகள் ஏற்றம்பெற்ற பின்நிப்டி 23 ஆயிரத்து 430 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
42 புள்ளிகள் ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 739 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 282 புள்ளிகள் உயர்ந்த பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 23 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/W03DJxf
via IFTTT
0 Comments