செய்திகள்

ஷில்லாங்,

மேகாலயா மாநில சுகாதாரத்துறை மந்திரி அப்பரீன் லன்டோ நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-

எய்ட்ஸ் நோய் பாதித்த மாநிலங்களில் தேசிய அளவில் மேகாலயா மாநிலம் 6-வது இடத்தில் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் இங்குதான் எச்.ஐ.வி. பாதித்தவர்கள் அதிகம். எனவே திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற பரிசீலனை செய்து வருகிறோம். கோவாவில் இந்த சோதனை கட்டாயமாக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நாமும் ஏன் அதை சட்டமாக்கக் கூடாது. இது சமுதாயத்துக்கு பெரும் பயன்தரும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாநில துணை முதல்-மந்திரி தலைமையில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சுகாதாரத்துறை மந்திரி கலந்துகொண்டார். கூட்டத்தில் எய்ட்ஸ் சோதனையை சட்டமாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/aEeXlQW
via IFTTT

Post a Comment

0 Comments