செய்திகள்

ராவல்பிண்டி,

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லாகூரில் நடந்த முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் 93 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஷான் மசூத் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் - இமாம் உல் ஹக் களமிறங்கினர். இவர்களில் இமாம் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷபிக் உடன் கேப்டன் ஷான் மசூத் கை கோர்த்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அணியை முன்னெடுத்து சென்றனர்.

சிறப்பாக விளையாடிய ஷபிக் 57 ரன்களிலும், மசூத் 87 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த பாபர் அசாம் 16 ரன்களில் நடைய கட்டினார். பின்னர் களமிறங்கிய சாத் ஷகீல் நிலைத்து விளையாட ரிஸ்வான் 19 ரன்களில் அவுட் ஆனார்.

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் அடித்துள்ளது. சாத் ஷகீல் 42 ரன்களுடனும், சல்மான் ஆகா 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் மகராஜ் மற்றும் ஹார்மர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. 



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Jkr1bte
via IFTTT

Post a Comment

0 Comments