மும்பை,
தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் (அதிகாரப்பூர்வமற்ற) போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன. டெஸ்ட் போட்டிகள் பெங்களூருவிலும், ஒருநாள் போட்டிகள் ராஜ்கோட்டிலும் நடக்கிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த ரிஷப் பண்ட் அதன்பின் எந்த போட்டிகளிலும் களமிறங்கவில்லை. இந்த சூழலில் தற்போது அவர் மீண்டும் கேப்டனாக களத்திற்கு திரும்பியுள்ளார்.
ரிஷப் பண்ட் தலைமையிலான அந்த அணியில் ரஜத் படிதார், படிக்கல், சாய் சுதர்சன் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அத்துடன் 2-வது போட்டிக்கான அணியில் கே.எல்.ராகுல், துருவ் ஜூரெல், கெய்க்வாட், சிராஜ், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
முதல் போட்டிக்கான இந்திய ஏ அணி விவரம்: ரிஷப் பண்ட் (கேப்டன்), ஆயுஷ் மாத்ரே, ஜெகதீசன், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், அன்ஷுல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் படோனி, சரண்ஷ் ஜெயின்.
2-வது போட்டிக்கான இந்திய ஏ அணி விவரம்: ரிஷப் பண்ட் (கேப்டன்), கே.எல்.ராகுல், துருவ் ஜூரல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியான், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அபிமன்யு ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/i7Va9JE
via IFTTT
0 Comments