சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பயணிகளின் வசதிக்காக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-17652) படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி வருகிற டிசம்பர் 6-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இதே மாற்றங்கள், செங்கல்பட்டில் இருந்து காச்சிகுடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (17651) டிசம்பர் 8-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (17644) படுக்கை வசதி பெட்டிக்கு பதிலாக ஒரு 2-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி வருகிற டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது. இதே மாற்றங்கள், செங்கல்பட்டில் இருந்து காக்கிநாடாவிற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் (17643) டிசம்பர் 7-ந் தேதி முதல் இணைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/ftLGIZn
via IFTTT
0 Comments