செய்திகள்

சென்னை,

சிலம்பரசன் "தக் லைப்" திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னையில் தொடங்கியது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வைரலானது. சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், வெற்றி மாறன் பிறந்தநாளையொட்டி சிலம்பரசன் நடிக்கும் ‘எஸ்டிஆர் 49’ படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. 

‘எஸ்டிஆர் 49’ பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு முன்னோட்ட வீடியோ திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகுமென சமீபத்தில் அறிவித்தார்,

இந்நிலையில், ‘எஸ்டிஆர் 49’ படத்தின் டைட்டில் நாளை காலை 8.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/wpvj3OW
via IFTTT

Post a Comment

0 Comments