செய்திகள்

நெல்லை,

நெல்லையில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை என்றும், சுமார் 9 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அப்பாவு, “ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இடத்தில், 9 ஆயிரம் என்பதை பெரிய எண்ணிக்கை என்று சொல்லமாட்டேன். ஒரு பணியிடம் காலியாகும்போது உடனடியாக அங்கு மற்றொரு நபரை நியமனம் செய்துவிட முடியாது. அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன.

அந்த நடைமுறைகளின் அடிப்படையில்தான் வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்ய முடியும். ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி., செட் தேர்வு உள்ளிட்ட பல நிர்வாக தேர்வுகள் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.  



from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/Ukdbn0R
via IFTTT

Post a Comment

0 Comments