புதுடெல்லி,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் 117 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது ‛ எக்ஸ்' தள பதிவில் கூறியதாவது:-
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு எனது வாழ்த்துக்கள். ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒவ்வொரு இந்திய வீரரும் நம் நாட்டின் பெருமை. ஒலிம்பிக் போட்டிகளில் தங்களின் அசாத்திய திறனை வெளிப்படுத்த வீரர்களுக்கு வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/eO5vNyd
via IFTTT
0 Comments