செய்திகள்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் காவு விளையை சேர்ந்தவர் அனீஷ். இவரது நண்பர் வாரு விளையை சேர்ந்த ஷிஜு. இவர்கள் 2 பேரும் சேர்ந்து 2017-ம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வர்க்கலை போலீசில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அனீஷ், ஷிஜு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை வர்க்கலை விரைவு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் அனீஷ், ஷிஜு ஆகிய 2 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குற்றவாளிகள் 2 பேருக்கு தலா 23 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.ஆர்.சினி தீர்ப்பளித்தார்.



from Today Tamil News Live Updates | தமிழ் செய்தி | Latest Tamil News Online | Tamil News Paper | தமிழ் நியூஸ் https://ift.tt/bdFgxs0
via IFTTT

Post a Comment

0 Comments