கவுகாத்தி,
13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் கவுகாத்தியில் இன்று மாலை நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
from தினத்தந்தி செய்திகள் | Tamil News | Tamil News Paper | Today News in Tamil | Live Tamil News https://ift.tt/DcGbwAW
via IFTTT
0 Comments