புதுடெல்லி,
கோ கோ உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி தலைநகர் டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, நேபாளம் அணியுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய இந்திய அணி 54-36 என்ற புள்ளிக்கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி கோ கோ உலகக் கோப்பையை வென்றது.
முன்னதாக நடைபெற்ற பெண்களுக்கான கோ கோ உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேபாளத்தை 78-40 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. கோ கோ உலகக்கோப்பையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/qukgsvI
via IFTTT
0 Comments