சென்னை,
சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளின் கருப்பு துப்பட்டாவை போலீசார் அகற்றினர். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவிகளின் கருப்பு துப்பட்டா அகற்றப்பட்ட விவகாரத்திற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், " பணியில் இருந்த காவலர்கள் தேவைக்கு அதிகமான எச்சரிக்கையுடன் செயல்பட்டதே காரணம். இனியும் இதுபோன்று நிகழாமல் இருக்க சென்னை காவல் பிரிவிற்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. விழா அரங்கிற்குள், அனுமதிக்கப்பட்ட நபர்களை தணிக்கை செய் போலீசார் கருப்பு துப்பட்டா அணிந்து வந்தோரிடம், துப்பட்டாவை வாங்கி வைத்தனர்" என தெரிவித்துள்ளது.
from தமிழ் செய்திகள், Tamil news, Tamil news paper, Latest tamil news live, Today Tamil breaking news online | Daily Thanthi https://ift.tt/G9YPjxq
via IFTTT
0 Comments