சென்னை,
மதுரையில் நடந்த தவெகவின் 2வது மாநில மாநாட்டில் விஜய் பேசுகையில், நம்முடைய கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக விமர்சித்து பேசி இருந்தார். இது குறித்து சென்னையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
விஜய்யின் மாநாடு அரசியல் கூட்டம் போல் இல்லை; ஒரு நடிகரை பார்க்க வந்த கூட்டம். கொள்கை எதிரி பாஜக என்று கூறும் விஜய் தனது கொள்கையை கூறவில்லை. தாமரை இலையில் தண்ணீர் ஒட்டத்தேவையில்லை. தாமரை தண்ணீரில் வளரும். பாரதிய ஜனதாவை விமர்சிக்கும் விஜய் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/0VxzPMo
via IFTTT
0 Comments