காபூல்,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் இடையிலான 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்த தொடர் அக்டோபர் 2ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும், அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடக்கின்றன.
இந்நிலையில், இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிடி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் டி20 அணி விவரம்: ரஷித் கான் (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான் (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், வபியுல்லா தாரகில், தர்வீஷ் ரசூலி, அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, ஷரபுதீன் அஷ்ரப், நூர் அஷ்ரப், நூர் அஷ்ரப் அஹ்மத் மாலிக், அப்துல்லா அஹ்மத்ஸாய்.
ரிசர்வ் வீரர்கள்: ஏ.எம். கசன்பர், ரஹ்மத் ஷா.
ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி விவரம்: ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கேயாலியா க்ஹரோடே பஷீர் அகமது, முகமது சலீம் சபி.
ரிசர்வ் வீரர்கள்: பிலால் சாமி மற்றும் பரிடூன் தாவூத்சாய்.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/rDpSWbF
via IFTTT
0 Comments