சேலம்,
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் நபர் ஒருவரை 3 பேர் தாக்கி, அவரிடம் இருந்த செல்போனை பறித்து வழிப்பறி செய்ததாக வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதாவது, சேலம் அம்மாபேட்டை அருகே 18 வயது இளைஞர், சிறுமி ஒருவருடன் நட்பில் இருந்துள்ளார். சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, நெல்லையை சேர்ந்த பிரம்மநாயகம் என்ற நபர், சுரேஷ் என்ற பெயரில், போலி இன்ஸ்டா ஐடி மூலம் சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி சிறுமி தனது ஆண் நண்பரிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிரம்மநாயகத்தை தொடர்பு கொண்டு சிறுமியின் நண்பர் எச்சரித்த நிலையில், பெண் பெயரில் இன்ஸ்டா ஐடி ஒன்றை உருவாக்கி, மீண்டும் அந்த ஆசாமி அட்டகாசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சிறுமியின் நண்பர், பெண் பெயரில், பேக் இன்ஸ்டா ஐடியை உருவாக்கி, சேலத்திற்கு வரவைத்து, செல்போனை பறித்து, உடைத்துப் போட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
from Tamil News: Latest Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/67OMN9C
via IFTTT
0 Comments