காந்தி நகர்,
5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத்தின் வதோதராவில் இன்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியனஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் நெட் சிவர் பெர்ட் அதிகபட்சமாக 65 ரன்கள் சேர்த்தார். டெல்லி தரப்பில் அந்த அணியின் ஸ்ரீ ஷரனி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி 19 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 51 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மும்பையை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அபார வெற்றிபெற்றது.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/DrvQq0b
via IFTTT
0 Comments