பல்லேகல்லே,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. கொழும்புவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இலங்ஐ - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
மிட்செல் மார்ஷ் (54), டிராவிஸ் ஹெட் (56) ஆகியோரின் அரைசதத்தால் ஆஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது.
182 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. நிசாங்கா 32 பந்தில் அரைசதமும், குசால் மெண்டிஸ் 35 பந்தில் அரைசதமும் அடித்தனர்.குசால் மெண்டிஸ் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். நிசாங்கா 100 ரன்களுடனும், ரத்னயகே 28 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இலங்கை 18 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு மங்கியுள்ளது.
Sri Lanka seal their #T20WorldCup Super 8 berth with an epic win over Australia
— ICC (@ICC) February 16, 2026
Watch highlights from every match of the ICC Men’s T20 World Cup on https://t.co/CPDKNxpgZ3 https://t.co/OWB5gfMwuM
from dailythanthi https://ift.tt/lykjgGm
via IFTTT
0 Comments