சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் ‘தாய் கிழவி’. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார்.நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இதில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். இப்படத்தில் வட்டிக்கு விடும் பவுன் தாய் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்திருந்த டீசர் வெளியாகி பலரிடமும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
‘தாய் கிழவி’ படத்தின் டிஜிட்டல் உரிமத்தை பிரபல ஓ.டி.டி. தளம் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது. இதன் முதல் பாடலான, ‘தாய்கிழவி வாரா’ பாடலும் ஹிட் அடித்தது.
இந்நிலையில், ‘தாய் கிழவி’ படத்தின் 2வது பாடலான ‘மாட்டிக்கிட்டான் மைனர்குஞ்சு’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை அருண்ராஜகாமராஜ் வரிகளில் சுப்லக்ஷினி பாடியுள்ளார்.
#MaatikitaanMinorkunju out now
— Radikaa Sarathkumar (@realradikaa) February 21, 2026
Second single from our #ThaaiKizhavi.
️ @Sublahshini
✍ @Arunrajakamaraj
@nivaskprasanna
▶️ Watch now: https://t.co/J1Ggac0PX5#ThaaiKizhaviFromFeb27 pic.twitter.com/wVzNK76E6h
from dailythanthi https://ift.tt/5uxfSlP
via IFTTT
0 Comments