பெங்களூரு,
கர்நாடகா மாநிலத்தில் எஸ்எஸ்எல்சி(10-ம் வகுப்பு) தேர்வில் முக்கிய மாற்றங்களை அரசு அறிவித்துள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வின் மொத்த மதிப்பெண் 625 இலிருந்து 525 ஆக குறைக்கப்படுகிறது. இதுவரை மூன்றாம் மொழி பாடத்திற்கு வழங்கப்பட்ட 100 மதிப்பெண்கள் இனி மொத்த மதிப்பெண் கணக்கில் சேர்க்கப்படாது.
மேலும், மூன்றாம் மொழி பாடங்களுக்கு இனி ‘மதிப்பெண்’ முறைக்கு பதிலாக ‘கிரேடு’ (A, B, C, D) முறை மட்டும் பின்பற்றப்படும். இந்த மாற்றம் இந்தி, சமஸ்கிருதம், துளு, மராத்தி, அரபி, தெலுங்கு உள்ளிட்ட அனைத்து மூன்றாம் மொழிகளுக்கும் பொருந்தும். இந்த புதிய நடைமுறை 2026 10-ம் வகுப்பு தேர்விலிருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்த மாற்றம் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் தேர்வு அழுத்தத்தை குறைத்து, முழுமையான கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த மாற்றத்தின் நோக்கம் என அரசு தெரிவித்துள்ளது.
from dailythanthi https://ift.tt/EmRjGhD
via IFTTT
0 Comments