ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (ஏப்ரல் 21) நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் ஷர்மா அதிரடி துவக்கம் கொடுத்தார். இவருடன் மற்றொரு துவக்க வீரராக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் தன் பங்கிற்கு 26 பந்துகளில் 37 ரன்களை குவித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் 13 பந்துகளில் 25 ரன்களும், ஹென்ரிட்ச் கிளாசன் 13 பந்துகளில் 37 ரன்களும் விளாசினர்.
இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்களை குவித்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழக்காமல் 68 பந்துகளில் 135 ரன்கள் (10 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார்.
கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் பதும் நிசங்கா 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுபக்கம் கே.எல். ராகுல் 23 பந்துகளில் 37 ரன்களும், நிதிஷ் ராணா 22 பந்துகளில் 57 ரன்களை குவித்தும் ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை மட்டுமே அடித்த நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சன்ரைசர்ஸ் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய இஷான் மலிங்கா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷர்ஷ் துபே 3 விக்கெட்டுகளையும், தில்ஷன் மதுஷனகா மற்றும் ஷகிப் ஹூசைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
Explosive with the bat
— IndianPremierLeague (@IPL) April 21, 2026
Lethal with the ball ⚡#SRH clinch a 4️⃣7️⃣-run win to make it three-in-a-row at home
Updates ▶️ https://t.co/VgUjXDlrDh#TATAIPL | #KhelBindaas | #SRHvDC | @SunRisers pic.twitter.com/Vcmp5r5sh1
from dailythanthi https://ift.tt/Qj4BUbA
via IFTTT
0 Comments