லக்னோ,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு லக்னோவில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை பதம் பார்த்தது. இதில் முதலில் பேட் செய்த ராஜஸ் தான் ஒரு கட்டத்தில் 77 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. இதன் பிறகு ரவீந்திர ஜடேஜா (43 ரன், நாட்-அவுட்), டோன வன் பெரேரா (20 ரன்), சுபம் துபே (19 ரன்) ஆகியோரின் போராட்டத்தால் ராஜஸ்தான் ஒரு வழியாக 150 ரன்களை கடந்து 6 விக்கெட்டுக்கு 159 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய லக்னோ அணி 18 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. கேப்டன் ரிஷப் பண்ட், மார்க்ரம், ஆயுஷ் பதோனி ஒரு சேர டக்-அவுட் ஆனார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஆல்-ரவுண்டராக ஜொலித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐ.பி.எல்.-ல் அவர் ஆட்டநாயகன் விருதை பெறுவது இது 17-வது முறையாகும். பின்னர் அவர் கூறு கையில், “ஆட்டநாயகன் விருது மற்றும் அணி வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருதை குஜராத் கல்வித்துறை மந்திரிக்கு (ஜடேஜா வின் மனைவி ரிவாபா மந்திரியாக இருக்கிறார்) சமர்ப்பிக்க விரும்புகிறேன். ஏனெனில் முந்தைய நாள் அவரிடம் பேசிய போது, நாளைய ஆட் டத்தில் நீங்கள் ஏதாவது அதிசயம் நிகழ்த்தப்போகிறீர்கள் என்று சொன்னார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு அவ்வளவு எளிதாக இல்லை. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக பந்து நன்கு ஸ்விங் ஆகிக் கொண்டிருந்தது. அதனால் நினைத்தபடி எல்லா விதமான ஷாட்டுகளையும் அடிக்க முடியாது. எனவே முடிந்த வரை நீண்ட நேரம் நின்று விளையாட வேண்டும் என்று நினைத்து செயல்பட்டேன். டோனவன் பெரேரா மற்றும் அடுத்த வந்த பேட்ஸ்மேன்களிடமும் இதையே கூறினேன். ஏனெனில் 20 ஓவர் கிரிக் கெட்டில் எப்போது வேண்டுமென்றாலும் ஆட்டம் மாறலாம். கடைசி ஓவரை திட்டமிட்டபடி சரியாக பயன்படுத்திக் கொண்டோம். அந்த ஓவரில் 20 ரன்கள் விளாசினோம்.
நிகோலஸ் பூரனின் (22 ரன்) விக்கெட்டை வீழ்த்தியதும் கைகளை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வித்தியாசமாக கொண்டாடியது குறித்து கேட்கிறீர்கள். அவர் எனது பாக்கெட்டுக்குள் இருப்பதாக அதாவது எனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அர்த்தம். மற்றபடி பெரிதாக காரணம் ஒன்றும் கிடையாது. சாதாரணமாக எனது மனதில் தோன்றிய யோசனையை அப்படியே செய்தேன்” என்றார்.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 23, 2026
from dailythanthi https://ift.tt/gbx1ZWE
via IFTTT
0 Comments