செய்திகள்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம் 'ஐ அம் கேம்'. இந்த படத்தை 'ஆர்.டி.எக்ஸ்' படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜேக்ஸ் பிஜோய் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 'ஐ அம் கேம்' திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

இந்த நிலையில் 'ஐ அம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20-ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



from dailythanthi https://ift.tt/1eX5UQF
via IFTTT

Post a Comment

0 Comments