செய்திகள்

சென்னை,

எழும்பூர் ரெயில் நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்படும் பொருட்கள் தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா, ரேஷன் அரிசி போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல் காரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் நடைபெறும் இதுபோன்ற குற்றச்சம்பவங்களை தடுக்க ரெயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபஸ்டின் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சென்னையில் இருந்து ஆந்திரா கடந்த முயன்ற 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மேல் நடவடிக்கைக்காக சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.



from dailythanthi https://ift.tt/5GCei7I
via IFTTT

Post a Comment

0 Comments