விழுப்புரம்,
புதுச்சேரி பெரியார் நகரில் வசித்து வருபவர் வசந்தகுமார் மனைவி ராஜலட சுமி (வயது 32). இவரும், அவரது தோழி விமலா என்பவரும் நேற்று முன் தினம் இரவு ஒரு ஸ்கூட்டரில் விழுப்புரம் வந்துவிட்டு மீண்டும் புதுச்சேரி நோக்கி புறப்பட்டனர்.
விழுப்புரம் அருகே கொளத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்றபோது பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க 3 1 வாலிபர்கள் திடீரென ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த 2% பவுன் சங்கி லியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்று விட்டனர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சமாகும். இதுகுறித்து ராஜலட்சுமி, விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
from dailythanthi https://ift.tt/jxKOc4L
via IFTTT
0 Comments