செய்திகள்

டெல்லி,

நிதி ஆயோக் கவுன்சிலின் 11வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் மற்றும் நிர்வாகிகள், மத்திய மந்திரிகள், நிதி ஆயோக் துணைத்தலைவர், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நாட்டின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, நிதிப்பகிர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இரவு விருந்து ரத்து

இதனிடையே, நிதி ஆயோக் கூட்டத்திற்குப்பின் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்துள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி இன்று இரவு விருந்து அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், மாநில முதல்-மந்திரிகளுக்கு இன்று இரவு அளிக்க இருந்த விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓமன் அருகே அரபிக்கடலில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்த நிலையில் முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அளிக்க இருந்த இரவு விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது.



from dailythanthi https://ift.tt/7hwo1Cx
via IFTTT

Post a Comment

0 Comments