செய்திகள்

சண்டிகார்

பஞ்சாப்பில் வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இந்த மாதம் பயணம் செய்வார் என மத்திய மந்திரி தெரிவித்து உள்ளார்.

பஞ்சாப்பில் முதல்-மந்திரி பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி செய்து வருகிறது. பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தயாராகி வருகின்றன.

பஞ்சாப் பயணம்

இந்த நிலையில் மத்திய ரெயில்வே துறைக்கான இணை மந்திரி ரவ்னீத் சிங் பிட்டு வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், பெரிய அளவிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இந்த மாதம் பஞ்சாப்புக்கு பயணம் செய்வார்.

பஞ்சாப்பின் வளர்ச்சிக்கு தேவையான நிதிக்கு பற்றாக்குறை ஏதும் ஏற்படாமல் மத்திய அரசு உறுதி செய்துள்ளது என கூறிய அவர், உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பொது நல துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளும் உறுதி செய்யப்படுகின்றன என்றார்.

சட்டசபை தேர்தல்

பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தனித்து போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. அதற்காக முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்று பிட்டு கூறினார். சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் நிதின் நபின் பஞ்சாப்புக்கு சென்றார்.

இதனை குறிப்பிட்ட பிட்டு, இதனால், ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் புத்துணர்வு பெற்றுள்ளது என்றும் புதிய ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறோம் என்றும் கூறினார்.



from dailythanthi https://ift.tt/aHWSGAr
via IFTTT

Post a Comment

0 Comments