மதுரை,
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு நாளை பக்தர்கள் மலையேறி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பரவிய காட்டுத்தீ
காட்டுத்தீ காரணமாக ஏற்கனவே பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இரவு 7 மணியளவில் காட்டுத்தீ மீண்டும் பரவுவதை வனத்துறையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளையும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நிலைமை சீரான பிறகே அனுமதி
காட்டுத்தீ பரவல் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். “நிலைமை சீரான பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அறிவிக்கப்படும்” என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
from dailythanthi https://ift.tt/U3EkFoZ
via IFTTT
0 Comments