செய்திகள்

திருச்சி,

காற்றின் தரத்தில் திருச்சி மாநகரம் முதலிடம் பிடித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடத்திய 'சுவச் வாயு சர்வேஷன் 2026 காற்றின் தரம் பற்றிய ஆய்வில், ஒரு லட்சத்துக்கும் மேல் மக்கள் வாழும் நகரங்கள் பிரிவில் திருச்சி 12-வது இடம் பெற்றுள்ளது.

கடந்த ஆண்டின் ஆண்டின் 9-வது இடத்திலிருந்து பின்வாங்கிய போதும், தமிழக அளவில் திருச்சி மாநகராட்சி தன் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. காற்று மாசு பாட்டை குறைக்க நகரங்கள் எடுத்த நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

வாகன புகை, குப்பை எரிப்பு, சாலை தூய்மை என 7 பிரிவுகளின் கீழ் மதிப்பிடப்பட்டு, 200 மதிப்பெண்களுக்கு திருச்சி 183 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. இந்த பட்டியவில் லக்னோ, இந்தூர், ஜபல்பூர் முதல் மூன்று

இடங்களை பிடித்துள்ளன. சென்னை 35-வது இடத்திலும், மதுரை 39-வது இடத்திலும் உள்ளன.

இது குறித்து மாசு கட்டுப் பாட்டு வாரிய அலுவலர்கள் கூறுகையில், திருச்சியில் காற்றில் கலக்கும் பி.எம். 10 நுண்துகள்களின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. 2017-18 நிதி ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 88 மைக்ரோ கிராமமாக இருந்த இந்த அளவு, 2025-26 நிதி ஆண்டில் 53 மைக்ரோ கிராமமாக சரிந்துள்ளது.

சாலை மண், தூசு அகற்று தல் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் ஆகியவற்றில் முன்னேற்றம் இருந்தாலும் வாகன புகை தொடர்ந்து சிக்கலாகவே உள்ளது. கட்டுமான கழிவு மறுசுழற்சி - ஆலை இல்லாத நிலை மற்றும் திறந்த வெளியில் குப்பைகள் எரிப்பது போன்றவை காற்றின் தரத்தை பாதிக்கின்றன என்றனர்.



from dailythanthi https://ift.tt/NwjgxXF
via IFTTT

Post a Comment

0 Comments