சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-திருப்பதியில் நடக்கும் கருட சேவையை முன்னிட்டு, பயணிகளின் கூட்டநெரிசலை குறைக்க, சென்னை-திருப்பதி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
* திருப்பதியில் இருந்து நாளை(20-ந்தேதி) நள்ளிரவு 1 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில்(வ.எண்.07610), அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.
* சென்னை கடற்கரையில் இருந்து நாளை(20-ந்தேதி) காலை 5 மணிக்கு புறப்பட்டு செல்லும் சிறப்பு மின்சார ரெயில்(வ.எண்.07609), காலை 8.40 மணிக்கு ரேனிகுண்டா சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
from dailythanthi https://ift.tt/RTCK3dQ
via IFTTT
0 Comments