செய்திகள்

கெய்ரோ,

எகிப்தை சேர்ந்தவர் சாரா கலீபா (வயது 39). அந்த நாட்டின் பிரபல செய்தி தொலைக்காட்சி தொகுப்பாளராக உள் ளார். முக்கியமான நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வந்த இவர் மாடல் அழகியாகவும், விளம்பரங்களில் நடித்தும் வந்தார்.

இந்தநிலையில் எகிப்தில் வெளி நாடுகளில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து கொகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருளை தயாரித்து விற்பனை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சாரா கலீபாவுக்கும் தொடர்பு இருப்பதாக துப்பு கிடைத்ததை தொடர்ந்து அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தினார்.

அப்போது அவருடைய வீட்டில் 750 கிலோ போதைப்பொருட்கள், வீட்டின் அருகே இரண்டு ஆய்வகங்கள் மற்றும் உரிமம் இல்லாத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சாரா கலீபா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். கோர்ட்டில் அவர் உள்பட 12 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது.



from dailythanthi https://ift.tt/Mprjf82
via IFTTT

Post a Comment

0 Comments