சமூகம்

                                சமூகம்

                                          




சமூகச் சந்தையில்

காலடியில் !    

சில்லறைகளிடம்  சிக்கி

சில்லறையானது

நாணயம்!

                                                 எல்லாக் கருப்பும்

வெள்ளுடையில்

வெளியே!

                                                பெண்மையை

மதியா

ஆண் வர்க்கம்!

 

வியாபார வரிசையில்

அரசியல்

முதலிடம் !

                                                உழைப்பவனுக்கு இல்லை

உருப்படியான

சன்மானம்!

 

நீதிதேவதையின்

பார்வை

நிதியின் மேல்!

                                                மெய்யை

பொய் வெல்லும்

சமூகம்!

                                                அல்லன இருப்பினும்

சமூகமோர்

நந்தவனம்!

 

மனிதநேயம்

மலர்ந்து

கொண்டே இருப்பதால்!

 

இல்லாதோர்க்கு

ஈந்து மகிழ்வோர்

இருப்பதால்!

 

உயிர் காக்கும்

நோக்கம்

உயர்ந்திருப்பதால்!

 

சத்தான சமூகச்செடி

முளைக்க

  

அறமெனும் வித்துகளை

அதிகமாக

விதைத்து வைப்போம்.

Post a Comment

1 Comments

  1. பல்லோரும் புழங்கும்
    .......பணமதை லஞ்சமாக்கி
    வல்லோனாய் ஆக
    ...... வஞ்சமே செய்கின்றார்.!
    கல்லூரி முதலாய்க்
    .......கல்லறை வரையில்
    சில்லரையே பேசும்
    .......சிக்கலே வாழ்வாகும்.!

    *கலிவிருத்தம்*

    பெருவை கி.பார்த்தசாரதி

    ReplyDelete