நாக்கு
சுவையுணர் அரசன்
சுற்றிலும் காவலர்கள்.
அரங்கினுள் அழகாய்
ஆடும் ஆடலரசி.
வல்லரசுகளையும் வீழ்த்தும்
வலிமையான ஆயுதம்.
கனிவான சொல்லமுதம்
சுரக்கும் அட்சய பாத்திரம்.
பேசும் மொழிகளெலாம்
பூப்பது இந்நந்தவனத்தில்.
வயிற்றுப் பாதையின்
வாயில் காப்போன்.
உமிழ்நீர் ஊற்று
எந்நாளும் வற்றாது.
காரத்துடன் போரிட்டு
கண்ணீர் சுரப்பான்.
இனிப்புடன் உறவாடி
உமிழ்நீர் சுரப்பான்.
சுடு சொல்பேசி
வடு ஏற்படுத்துவதும் இவரே.
அடக்கி வைத்திடின்
உடலும் உள்ளமும்
ஓங்கி இருக்கும்.
1 Comments
மிகவும் அருமை வாழ்த்துக்கள்
ReplyDelete