கற்றலினிது


கற்றல்இனிது



                                                                    கருவறை முதல்

கல்லறை வரை

கற்றலினிது.

 

கற்றது கையளவு

ஆதலால் கற்றலினிது.

 

கற்க கசடற

ஆதலால் கற்றலினிது.

 

மழலைக்கு

அன்னை மொழி

கற்றலினிது.

 

ஆண்டு ஒன்றில்

நடைபழக

கற்றலினிது.

 

அடுத்த அகவையில்

அமுதுண்ண

கற்றலினிது.

 

ஆரம்பப் பள்ளி ஆசானிடம்

அகரம்

கற்றலினிது.

 

விடலைப்  பருவத்தே

விளையாட்டு

கற்றலினிது.

 

பள்ளியில்

புதிய பாடங்கள்

கற்றலினிது.

 

கல்லூரியில்

கலைகள் பல

கற்றலினிது.

 

பணியில்

பலவித பரிமாணங்கள்

கற்றலினிது.

 

இல்லறத்தில்

இனிமை காண

கற்றலினிது.

 

வாழ்க்கைப் பயணத்தில்

வழித்துணையோடு

கற்றலினிது.

 

தொடர்பயணத்தில

தோல்விகளால்

துவளாமலிருக்க

கற்றலினிது.

 

பொருள் சேர்க்கும்

போராட்டத்தில்

கற்றலினிது.

 

ஈன்றோரைத் தாங்கும்

இன்ப வெள்ளத்தை

கற்றலினிது.

 

சறுக்கும் காலத்தே

சான்றோரின் பாடங்கள்

கற்றலினிது.

 

உற்றார் உறவினர்களின்

உள்ளத்தைக்

கற்றலினிது.

 

நோய் நொடிகளின்

துன்பத்தில்

கற்றலினிது.

 

ஒவ்வாமைகளை

ஒதுக்க

கற்றலினிது.

 

முடிவுரை

வரும்வரை

காத்திருக்க

கற்றலினிது.

 

கருவறை முதல்

கல்லறை வரை

கற்பதே இனிது.

 

கற்றதுபோல்

நிற்பது அறிவு

ஆதலால் கற்றலினிது.

 

கற்றதுபோல்

நிற்பது அரிது

ஆதலால் கற்றலினிது.

 

இனிதே கற்று

இன்பமாய்

வாழ்வைக்

களிப்போம்.

 

Post a Comment

0 Comments