நினைவு தினம் இன்று.
நவில்கின்றேன் எனக்கு
பிடித்த காட்சியை.
தருமியோடு நடக்கும்
தர்க்க உரையாடலும்
நக்கீரரோடு வாதம்
செய்யும் நற்காட்சியும்
நற்றமிழ் பேசும்
அடுக்குத் தொடரும்
வற்றாத தமிழுக்கு
வளம் சேர்க்கும்.
தருமியோடு நடக்கும்
தர்க்க உரையாடலும்
நக்கீரரோடு வாதம்
செய்யும் நற்காட்சியும்
நற்றமிழ் பேசும்
அடுக்குத் தொடரும்
வற்றாத தமிழுக்கு
வளம் சேர்க்கும்.
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியென்ற
மங்காத பாடலை
ஏற்ற இறக்கத்துடன்
சிங்கக்குரலில்
கேட்கும்போது
சிலிர்க்குமே மேனி.
எல்லாம் எமக்குத்
தெரியும் எனும்போது
திருமுகம் காட்டுமே
தெளிவான துடிப்பு.
அருமையான காட்சியில்
அழகான நடிப்பு.
0 Comments