தேசிய மருத்துவர்கள் தினம்






உடற்பிணி நீக்கும் உன்னத பணியாம்.

இடர்கள் களையும் இனிய பணியாம்

முடக்கு நீக்கும் முக்கிய பணியாம்

நடந்திடும் மருத்துவர் நல்லோர் பணியாம்.


மாசுகள் விளைவித்த மாக்களின் வினையால்

வீசுகின்ற காற்றும் வினையானது நோயாய்.

பிணிகள் பெருகினாலும் பெருமைமிகு மருத்துவப் 

பணியால் மனிதம் காக்கும்

தெய்வமன்றோ!


அல்லல்பட்டு அவதியுறும் அருமை உடலை

வில்லல் படாமல் வேதனை நீக்கி

அகத்தில் மகிழ்ச்சியை அள்ளித் தெளித்து

சுகமளிக்கும் மருத்துவரை சிரமேற்க் கொள்வோமே!


இறப்பு விகிதத்தை  இளைக்கச் செய்த

இரண்டாம் கடவுளை இதயத்தில் ஏற்போமே!

நோயின் குணமறிந்து தாயாய் பணிபுரியும்

சேயோன் வடிவ தெய்வத்தைச் சேவிப்போமே.


Post a Comment

0 Comments