கொல்கத்தா,
7 மாநிலங்களுக்கு உட்பட்ட 13 சட்டசபை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 10 இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. பா.ஜனதாவுக்கு வெறும் 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மேற்கு வங்காளத்தில் 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. இதற்கு முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'நாடு முழுவதும் பா.ஜனதாவுக்கு எதிரான போக்கு நிலவுகிறது. இது மிகவும் தெளிவாக உள்ளது. ஏற்கனவே நடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கூட பா.ஜனதாவுக்கு சாதகமாக இல்லை. ஆனாலும் அவர்கள் விசாரணை அமைப்புகளின் ஆட்சியை மீண்டும் தொடங்கி இருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/nUFV216
via IFTTT
0 Comments