பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்தவர் இனாயத் உல்லா. இந்த வாலிபர், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந் தேதி தனது செல்போனில் இணையதளத்தில் சிறுமிகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்த்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு (2023) மே மாதம் 3-ந் தேதி பெங்களூரு புறநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இனாயத் உல்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் இனாயத் உல்லா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து, இனாயத் உல்லா மீது பதிவான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, மனுதாரர் தனது செல்போனில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருந்த சிறுமிகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பார்த்துள்ளார். இது குற்றம் இல்லை. எனவே அவர் மீது பதிவான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. சிறுமிகள் சம்பந்தப்பட்ட வீடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதும், அவற்றை சமூக வலைதளங்களில் பரப்புவதும் தான் சட்டப்படி குற்றமாகும் என்று கூறினார்.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/vbRAHeP
via IFTTT
0 Comments