செய்திகள்

கோவை,

கோவையில் சர்வதேச விமானநிலையம் உள்ளது. இங்கு இருந்து சென்னை, டெல்லி, புனே, கோவா, ஐதராபாத், பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களுக்கு தினமும் 25 விமானங்களும், வெளிநாடுகளான ஷார்ஜா, சிங்கப்பூருக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் இருந்து அபுதாபிக்கு விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 10-ந்தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது. இண்டிகோ நிறுவனம் மூலம் இயக்கப்படும் இந்த விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் 3 நேரடி விமானங்களை இயக்குகிறது.

அபுதாபிக்கு விமானம் இயக்கப்படுவதன் மூலம் கோவையில் இருந்து அபுதாபிக்கு சென்று மற்ற நாடுகளுக்கு செல்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் கோவையில் இருந்து துபாய்க்கு விமானம் இயக்கப்படுவது தொடர்பாகவும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/qzQNUZe
via IFTTT

Post a Comment

0 Comments