சேலம்,
டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 6வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஷிவம் சிங் மற்றும் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்கினர். ஷிவம் 2 ரன்னிலும், அஸ்வின் 6 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்துவந்த விமல் குமார் 47 ரன்னிலும், இந்திரஜித் 51 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் திண்டுக்கல் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
சேலம் தரப்பில் அந்த அணியின் ஹரீஷ் குமார், சன்னி சந்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் தொடக்க வீரர்களாக அபிஷேக், கெவின் களமிறங்கினர். அபிஷேக் 28 ரன்னிலும், கெவின் 46 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய விவேக் 51 ரன்கள் குவித்தார். இறூதியில் சேலம் 18.1 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
இதன் மூலம் திண்டுக்கல்லை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேலம் அபார வெற்றிபெற்றது.
from Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper - தினத்தந்தி https://ift.tt/JHA6ude
via IFTTT
0 Comments