பெங்களூரு,
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிட் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர் ஒலிம்பிக் போட்டிகளை காண பாரீசுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் இந்தியா திரும்பிய டிராவிட் தமிழ்நாடு பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் அணிக்கு கோப்பையை வழங்கினார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் மைதான ஊழியர்களுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/Uj0G5K9
via IFTTT
0 Comments