
புதுடெல்லி,
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து ஆடினார். அதன் பின்னர் காயம் காரணமாக எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த முகமது ஷமி எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பிடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, முகமது ஷமி தற்போது பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வரும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
காயத்தில் இருந்து மீண்டு வரும் முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்புவதற்கு முன்னதாக உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். தனது கம்பேக்கிற்காக கடினமாக உழைத்து வரும் அவர் தற்சமயம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதன் காரணமாக அவர் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.
from தினத்தந்தி - Tamil News Paper | Latest Breaking Tamil News | Today's Tamil News https://ift.tt/idtsN0g
via IFTTT
0 Comments