சின்சினாட்டி,
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், சக நாட்டவரான பிராண்டன் நகாஷிமா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் பிராண்டன் நகாஷிமாவும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் டெய்லர் பிரிட்சும் கைப்பற்றினார். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அபாரமாக செயல்பட்ட பிராண்டன் நகாஷிமா 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தினார்.
இறுதியில் பிராண்டன் நகாஷிமா 6-4, 4-6, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டெய்லர் பிரிட்ஸை வீழ்த்தினார். இதன் மூலம் பிரிட்ஸ் முதல் சுற்றில் தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/TAk3o8Z
via IFTTT
0 Comments