புதுடெல்லி,
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ.யும் அவரை கைது செய்தது. இந்நிலையில், மணீஷ் சிசோடியாவின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, மணீஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
from தினத்தந்தி - Tamil News Paper | Latest Breaking Tamil News | Today's Tamil News https://ift.tt/kchMa6X
via IFTTT
0 Comments