லடாக்,
லடாக்கின் லே மாவட்டத்தில் பஸ் ஒன்று சாலையை விட்டு விலகி 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் பலியாகினர். மேலும், 21 பேர் காயமடைந்தனர்.
பள்ளி ஊழியர்களை திருமண நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்ற பஸ், துர்புக் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததாக லே மாவட்ட துணை ஆணையர் சந்தோஷ் சுகதேவ் தெரிவித்தார். லடாக்கின் துர்புக் அருகே பணியில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள், இன்று காலை 11 மணியளவில் 27 பயணிகளுடன் சென்ற பஸ் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாகவும், இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 3 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 21 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. காயமடைந்த 21 பேரையும் ராணுவ வீரர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர். காயமடைந்தவர்கள் முதலில் டாங்ஸ்டேயில் உள்ள இராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் மற்றும் 14 விமானங்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை லேயில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
from Tamil News: Today Tamil News Paper - Latest Breaking Tamil News https://ift.tt/bVSeqGy
via IFTTT
0 Comments