சென்னை,
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது வரை 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், 170-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை வசம் உள்ளன. இந்த நிலையில், மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க தூதரக ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு அவரிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
from தினத்தந்தி - Tamil News | Latest Breaking News Tamil | Today Tamil News Paper https://ift.tt/iENhWQY
via IFTTT
0 Comments